கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் - சுவிஸ் அரசு வெளியீடு

செவ்வாய், 26 மே 2015 (16:10 IST)
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் உள்பட 40 பேரின் பெயர்களை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.
 

 
வரி ஏய்ப்பு செய்வதற்காக இந்தியர்கள் சிலர் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கருப்பு பணமாக பதுக்கு வைத்துள்ளனர். அந்த பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை அளிக்குமாறு சுவிஸ் அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.
 
இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ளவர்களில் 40 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. சுவிஸ் அரசின் அரசிதழில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு இந்திய பெண்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன.
 
மேலும் அந்த இருவருக்கும், சுவிஸ் அரசு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில், ‘இந்திய அரசுக்கு உங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பதை நீங்கள் விரும்பாவிட்டால், 30 நாட்களுக்குள் சுவிஸ் பெடரல் நிர்வாகத்திடம் முறையீடு செய்யலாம்’ என தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்