பன்றிக் காய்ச்சலா? திருப்பதிக்கு வராதீர்கள் - தேவஸ்தானம் எச்சரிக்கை

வெள்ளி, 23 ஜனவரி 2015 (12:57 IST)
பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்தவர்களும், நோய் அறிகுறி இருப்பவர்களும் திருமலை திருப்பதிக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 21 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் நூற்றுக் கணக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், திருமலை திருப்பதியில் குளிர் நிலவுவதால், பன்றிக் காய்ச்சல் கிருமிகள் வேகமாகப் பரவும் ஆபத்து இருப்பதால், பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவர்களும், நோய் அறிகு உள்ளவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்