ஸ்விகி, சொமேட்டோ சலுகைகளுக்கு ஆப்பு வைத்த உணவக சங்கம்

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:54 IST)
ஓட்டலில் சென்று குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சாப்பிட்ட காலம் மலையேறி தற்போது வீட்டிற்கே ஓட்டல் சாப்பாட்டை வரவழைத்து சாப்பிடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உணவுகளை வீடுகளுக்கே சென்று சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஸ்விகி, சொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் பிரபலமாகி உள்ளது
 
இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் தொழில் போட்டி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களும் இந்த சலுகைகளால் கவரப்பட்டு அதிக அளவில் இந்த நிறுவனங்களின் மொபைல் ஆப்கள் மூலம் உணவுகளை வாங்கி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சொமேட்டோ, ஸ்விகி உள்பட முன்னணி உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய உணவக சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுவதால் உணவக நிறுவனங்களுக்கு கமிஷன் பிரச்சனை, அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் சலுகைகளை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இனிமேல் ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களின் சலுகைகள் நிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்