முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, திடீரென இன்று இலங்கையின் பிரதமராக பதவியேற்று கொண்டது இலங்கை மக்களுக்கு மட்டுமின்றி தமிழக, மற்றும் இந்திய மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்னும் நான் தான் இலங்கையின் பிரதமர் என ஒருபக்கம் ரணில் விக்ரமசிங்கே கூறி வருவதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் டெல்லி வந்திருந்த ராஜபக்சே, பிரதமர் மோடி, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சோனியா காந்தியை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிய பின்னர் திடீரென பிரதமர் ஆகியுள்ளதால் இந்த சந்திப்புக்கும் பிரதமர் பதவிக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.