இது இந்தியாவில் உள்ள அத்துனை சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 6 வருடங்கள் சுஷாந்தின் காதலியாக இருந்த நடிகை அங்கிதா லோகண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், கடவுள் உங்ளின் வாழ்க்கையில் இருந்து சிலரை நீக்குகிறார் என்றால்… அவர் உங்களுடன் நடந்த உரையாடலைப் பற்றிக் கேட்டுள்ளார் என்று 4: 30 மணியளவில் பதிவிட்டு பின் 6 மணி அளவில் அதை நீக்கிவிட்டார்.
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் ஒரு பதிவிட்டிருந்தார் நீ தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை; நான் உன் இதயத்திலும் வாழ்க்கையிலும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.