வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (13:30 IST)
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட சிவில் சட்ட விதிகளின் படி வாடகை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பும் குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடகைத்தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையை பெரும் தாய் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் இருவருக்கும் ஆறு மாத காலம் விடுமுறை வழங்கப்படும் என்றும் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்குவதற்கு இதுவரை எந்த சட்டமும் இல்லாத நிலையில் தற்போது புதிய சட்டத்தின்படி ஆறு மாத காலம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்