சமீப காலமாக அரசை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது தேச துரோக சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சட்டம் தேவையற்றது என்றும், நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “தேச துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது மரத்தை அறுக்க தச்சரிடம் ரம்பத்தை கொடுத்தால் அவர் காட்டையே அழிப்பது போல உள்ளது. ஆங்கிலேயர் கால தேச துரோக சட்டம் தற்போதும் தேவைப்படுகிறதா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.