எல்.ஐ.சி. ஐபிஓவுக்கு இடைக்கால தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

வியாழன், 12 மே 2022 (12:25 IST)
எல்.ஐ.சி. ஐபிஓவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது 
 
சமீபத்தில் எல்.ஐ.சி. ஐபிஓ வெளியான நிலையில் இதனை இலட்சக்கணக்கானோர் வாங்குவதற்கு முன் வந்துள்ளனர்.
 
இந்த நிலையில் எல்.ஐ.சி பணம் முழுவதும் பாலிசிதாரர்களின் பணம் என்றும் இந்த பணத்தை ஐபிஓ மூலம் திரட்ட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
மேலும் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது ஆனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் இந்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இப்போதைக்கு எல்.ஐ.சி. ஐபிஓவுக்கு இடைக்கால உத்தரவு இல்லை என்றாலும் இந்த வழக்கின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்