பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா கணக்குடனும் ஆதாரை இணைக்க வேண்டுமா?

திங்கள், 14 அக்டோபர் 2019 (12:28 IST)
சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
மத்திய அரசு ஆதார் எண்ணுக்கு அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் சார்பில் பலமுறை ஆதார் எண் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. 
 
மொபைல் எண், வங்கி எண், பான் எண் என அனைத்துடனும் ஆதார் இணைப்பு முக்கியம் என கூறப்பட்டு வந்த நிலையில் சமூக வலைத்தள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அஸ்வினி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், எல்லா வழக்கையும் நாங்கள் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என கூறப்பட்டது. 
 
ஆனால், மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததையடுத்து உச்சநீதிம்ன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. எனவே, சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்