டாக்டராக திரும்ப வேண்டியவன் பிணமாக திரும்பியுள்ளான் : தலித் மாணவரின் தாய் கண்ணீர்

புதன், 20 ஜனவரி 2016 (13:47 IST)
ஹைதராபாத் பல்கழைக்கழக மாணவர் ரோதிக் தற்கொலை செய்து கொண்டது பற்றி அவரது தாய் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஹைதராபத் கேந்திராய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படித்து வந்த ரோகித் வேமுலா என்ற மானவர் 18ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 
 
சாதியின் பெயரில் ஒழுங்கீனமாக நடப்பதாக கூறி ரோகித் வேமுலா உட்பட ஐந்து மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் இடை நீக்கம் செய்ததால். இந்நிலையில், ரோகித் வேமுலா தனது நண்பர் அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் நாடு முழுவதும் பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. 
 
இந்நிலையில், ரோதித்தின் தாய் ராதிகா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் “என் மகன் பி.எச்.டி முடித்து டாக்டர் பட்டத்துடன் திரும்புவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவனோ பிணமாக திரும்பியிருக்கிறான். கூலி வேலை பார்த்து நான் அவனை படிக்க வைத்தேன். அவன் படித்து வேலைக்கு சென்றவுடன் என் கஷ்டங்கள் தீரும் என நினைத்தேன்.
 
ஆனால் எல்லாம் முடிந்து விட்டது. என்னுடைய இன்னோரு மகன் ராஜூவை படிக்க வைக்க மாட்டென். அவனையும் நான் இழக்கத் தயாராக இல்லை. என் மகன் சஸ்பெண்டு ஆன விவகாரமே எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால், அவனை விட்டிற்கு அழைத்து வந்து அவன் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்திருப்பேன்.
 
உயர்கல்வி இவ்வளவு மோசமானது என்று முன்பே தெரிந்திருந்தால், அவனை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். கூலி வேலைக்கு அனுப்பியிருப்பேன்” என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்