மாணவர்கள் அச்சம் கொள்ளாமல் தேர்வில் கலந்து கொள்ளலாம்- புதுச்சேரி கலெக்டர்

Sinoj

வியாழன், 7 மார்ச் 2024 (21:26 IST)
நாளை புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில்,  பொது தேர்வு நடைபெற இருப்பதால் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்தவித இடையுறும் ஏற்படாதவாறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் 2 பேரை போலீஸார் கைது, அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இன்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை அறிவிக்கப்படுள்ளது.
 
இதனால், நாளை புதுச்சேரியில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை பொது தேர்வு நடைபெற இருப்பதால் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்தவித இடையுறும் ஏற்படாதவாறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் அமைப்புகள் நாளை 108.03.2024)-ம் தேதி பந்த கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக இன்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவைலகத்தி ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நாளை பொது தேர்வு நடைபெற இருப்பதால் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்தவித இடையுறும் ஏற்படாதவாறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் அச்சம் கொள்ளாமல் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் அனைத்து அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் ''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்