இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் ஜி.கே. வாசன் கோரிக்கை

வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (02:22 IST)
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் குறித்து, சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் குறித்த விசாரணைக்கு, இலங்கை அரசு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று, ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது இலங்கை அரசு உண்மை முகத்தை தெரியப்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் போரின் போது, இலங்கை ராணுவத்தினர், பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றசாட்டு உள்ளது.  அதே போல, உலகத்திலேயே போர் சமயங்களில், பத்திரிகையாளர்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டது இலங்கையில் தான். எனவே, இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதன் மூலம், உண்மை குற்றவாளிகள் உலகிற்கு அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்