கை கொடுக்காத மத்திய அரசு; நேரடியாக தடுப்பூசி தரும் ரஷ்யா! – டெல்லி முதல்வர் அறிவிப்பு!

வியாழன், 27 மே 2021 (08:34 IST)
டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கையிருப்பு இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்த நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசி நேரடியாக டெல்லிக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மாநில அரசுகள் தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டரை அறிவித்தன. ஆனால் மத்திய அரசின் மூலம் மட்டுமே தடுப்பூசி வழங்க முடியும் என தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் “டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி நிறுவனம் தடுப்பூசிகள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. எவ்வளவு தடுப்பூசிகள் என கூறப்படவில்லை” என்று கூறியுள்ளார். முன்னதாக டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட இல்லை, மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்