சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிறை அதிகாரிகள்

சனி, 22 ஜூலை 2017 (13:25 IST)
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


 

 
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு சிறப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. புகார் அளித்த டிஐஜி ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டர். இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார். 
 
இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள் சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் பற்றி எடுத்து கூறினர். இதையடுத்து பொதுக்கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளது உண்மைதான் என்று சிறை அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பான முழு விவரங்களை சொல்ல முடியாது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன் என்றார்.
 
மேலும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா வழங்கிய அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்