சோனியா காந்திக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

ஞாயிறு, 12 ஜூன் 2022 (15:50 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா தொற்றால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளடு
 
டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்