முடிந்தால் என்னை பிடியுங்கள் ; தாயை கொன்று ரத்தத்தில் எழுதிய மகன் : மும்பையில் அதிர்ச்சி

வியாழன், 25 மே 2017 (17:04 IST)
தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். 


 

 
இந்நிலையில், ஷீனாபோரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் கனோரின் மனைவி அவரது வீட்டுக்குள் வைத்தே குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.  அந்த கொலை நடந்த தேதியிலிருந்தே அவரது மகன் சித்தாந்த் காணவில்லை. இதனால், போலீசாருக்கு சித்தாந்த் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
 
மேலும், அவரது உடலுக்கு அருகே தீபாலியின் ரத்ததினால் சில ஸ்மைலி வரைந்து “முடிந்தால் என்னை பிடித்து தூக்கில் போடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது. 


 

 
விசாரணையில் கடந்த சில மாதங்களாக சித்தாந்தின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சித்தாந்துக்கு, அவரது தாய் தீபாலி செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இதனால், தாய்-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
எனவே, அப்படி ஒரு சூழ்நிலையில் தனது தாயை சித்தாந்த் கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும், வேறு கோணங்களிலும் போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்