தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்! – வலுக்கும் எதிர்ப்புகள்!

சனி, 4 ஜூன் 2022 (08:54 IST)
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தது வைரலான நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

குஜராத்தின் பரோடா பகுதியை சேர்ந்தவர் ஷாமா பிந்து. சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு பெற்றுள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே திருமணம் மீது ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஷாமாவுக்கு மணமகள் போல அலங்காரம் செய்து கொள்வது உள்ளிட்டவை பிடித்துள்ளது. இதனால் தன்னை தானே மணந்து கொள்ள முடிவெடுத்த ஷாமா இதை தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.

இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் ஜூன் 9ம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11ம் தேதி திருமணமும் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார் ஷாமா. இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் அதே சமயம் எதிர்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா “இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். அவர் தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்