கோவையில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிரடி சோதனை செய்து வரும் நிலையில் இந்த சோதனையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனுடன் கோவை இளைஞன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவையின் உக்கடம் என்ற பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் என்பவனுக்கும் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய ஸக்ரான் ஹசீன் என்பவனுக்கும் சமூக வலைதளம் மூலம் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகமது அசாருதின் உள்பட் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையின்போது 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு, 4 ஹார்டு டிஸ்க் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு அதனை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.