35 பயணிகளை மறந்து விட்டுவிட்டு சென்ற சிங்கப்பூர் விமானம்?

வியாழன், 19 ஜனவரி 2023 (16:15 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் 35 பயணிகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் பெங்களூரில் 55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற நிகழ்வு நடந்த ஒரு சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது
 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசஸில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 7:55 மணிக்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் செல்வதற்காக பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மாலை 3 மணிக்கு புறப்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் விமானம் புறப்படும் நேரம்  மாற்றப்பட்டுள்ளது என்றும் டிக்கெட் முன்பதிவு செய்த முகவர் விமான நேரம் மாற்றம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அதனால் தான் இந்த குழப்பம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்