நன்றி கூற வார்த்தைகள் இல்லை : ரஜினிக்கு ட்விட் போட்ட சிந்து

புதன், 24 ஆகஸ்ட் 2016 (11:20 IST)
தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக வெள்ளிப்பதக்கம் பெற்ற சிந்து டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


 

 
நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த அவருக்கு பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு வீடு, கார், அரசு வேலை மற்றும் கோடிக்கணக்கில் பணமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சிந்துவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்தில் “வாழ்த்துக்கள் சிந்து.. நான் உங்களின் ரசிகனாக மாறிவிட்டேன்” என்று கூறிப்பிட்டிருந்தார்.
 
கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினி, தன்னுடைய மகளை வாழ்த்தியது கண்ணீரை வரவழைக்கிறது என்று சிந்துவின் தாய் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
தற்போது, தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு சிந்து நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ரஜினி சார்.. மிகவும் நன்றி. என் உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தை இல்லை”  என்று குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்