உடற்பயிற்சி செய்த போது திடீரென மாரடைப்பு: காவல் துணை உதவி ஆய்வாளர் பரிதாப மரணம்..!

Siva

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:52 IST)
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றியவர் தத்தாத்ரி. 56 வயதான இவர் கடந்த 20 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துணை உதவி ஆய்வாளர் தத்தாத்ரி நேற்று காலை வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவருக்கு உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உடற்பயிற்சி செய்த போது பலர் இறந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது காவல்துறை அதிகாரி ஒருவரே உடற்பயிற்சி செய்தபோது இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்