கடையை துவம்சம் செய்த எலி; கட்டி வைத்த வியாபாரி : வெளியான வீடியோ

வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:41 IST)
தன்னுடைய மளிகைக் கடையில் அரிசி, பருப்புகளை துவம்சம் செய்த எலியை உயிருடன் பிடித்து அதை சித்ரவதை செய்த கடை வியாபாரிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 

 
மைசூரில் ராமண்ணா என்பவர் ஒரு மளிகைக்கடையை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் அவரது கடையில் உள்ள அரசி, பருப்பு மற்றும் இதர மளிகைப் பொருட்களை ஒரு எலி துவம்சம் செய்து வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த ராமண்ணா எப்படியாவது அந்த எலியை கொல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தார். ஆனால், பல வழிகளில் முயன்று அந்த எலி அவரிடம் சிக்கவில்லை.
 
இந்நிலையில், கடந்த வாரம் அந்த எலி ராமண்ணாவிடம் அகப்பட்டுக்கொண்டது. அதன் மீது இருந்த கோபத்தை தணிப்பதற்காக அவர் செய்த விவகாரம்தான் தற்போது விலங்கு நல வாரியம் வரை சென்றுவிட்டது.
 
சிக்கிய எலியை அனைத்து கால்களையும் ரப்பர் பேண்டால் கட்டி வைத்து அவர் சித்ரவதை செய்துள்ளார். ஒரு ஜாருக்குள் அதை விட்டு ‘ இனிமேல் என் கடைக்கு வருவாயா?’ என்கிற ரீதியில் குச்சியால் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதோடு, அவரின் செயலை வேடிக்கை பார்க்க, அவரது நண்பர்களை அழைத்து வந்துள்ளார்.  அப்போது அவரின் நண்பர் ஒருவர் அவர் எலியை சித்ரவதை செய்வதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். 
 
ஒரு சமயத்தில் அந்த ஜார் கீழே விழ அந்த எலி அவரிடமிருந்து தப்பி சென்றுவிட்டது. ஆனாலும், அந்த வீடியோ வெளியானதால், பலரும் அவருக்கு எதிராக கருத்து  தெரிவித்து வருகின்றனர்.
 
மனநோயாளிகளால் மட்டுமே இப்படி சிறிய ஜீவராசிகளை துன்பறுத்த முடியும் என சிலரும், ராமண்ணா தண்டிக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்