மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் 35 அடியை உயர சிலை கனமழையால் இடிந்து விழுந்த நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிலையின் கட்டுமான தரத்தில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் சிலை பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால் சிலை சேதம் அடைந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் இந்த சிலை தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சிலையை செதுக்கிய சிற்பி ஜெகதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் நீதிமன்ற காவலில் எடுக்கப்படுவார் என்றும் அதன் பின் நடக்கும் விசாரணையில் தான் சிலையை தரமற்ற முறையில் செய்தாரா என்பது குறித்து தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.