பேட்ரீஷியா கூறியதாவது, கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி ஒரு இளம் பெண்ணிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் மிகவும் பதற்றத்துடன் தன்னுடையை பெயரை சொன்னார். அந்தப் பெண் என்னிடம் உதவி ஆசிரியராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர்.
அப்போது கூறிய அந்த பெண் தான் பிஆர்ஓ வேலை கேட்டு இரவு 7 மணிக்கு ஆளுநர் சண்முகநாதனை சந்திக்க சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். நேர்முகத்தேர்வுக்கு வந்த தன்னிடம் சம்மந்தமில்லாத பல விஷயங்களை ஆளுநர் கேட்டதாகவும், தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பற்றிக் கேட்டதாகவும் கூறினார்.
அந்த அறையில் தன்னையும், ஆளுநரையும் தவிர வேறு இருக்கவில்லை. நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் அவசர அவசரமாக அந்த அறையிலிருந்து நான் வெளியேறிய போது திடீரென்று பின்னால் வந்த சண்முகநாதன் தன்னை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததாக அந்தப் பெண் கூறினார் என தெரிவித்தார்.