கொரோனா தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடக்கம்: சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!

புதன், 12 ஏப்ரல் 2023 (17:31 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டி உள்ளது என்பதும் இந்தியா முழுவதும் 7000ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
தமிழகத்திற்கும் 10 லட்சம்  கொரோனா தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் மாநில சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிறுவனம் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு ஊசியை தயாரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்