ஏடிஎம்ல பணம் எடுக்க போறீங்களா? செல்போன் கொண்டு போங்க! – எஸ்பிஐ புதிய அறிவிப்பு!

புதன், 16 செப்டம்பர் 2020 (11:34 IST)
ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி முறையை கட்டாயமாக்கப் போவதாக எஸ்பிஐ தலைமை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கிகளும், ஏடிஎம் மையங்களும் கொண்டுள்ள ஸ்டேட் பேங்க் தனது ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகள் சில சமயம் வேறு யாரிடமாவது கிடைத்து விடுவதும், அதன்மூலமாக அவர்களுடைய பணம் மோசடி செய்யப்படுவதுமான புகார்கள் அனைத்து வங்கிகளிலும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது அவர்களது பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் குறுந்தகவலில் அனுப்பப்படும். அதை ஏடிஎம் எந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே பணம் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாகவும், வரும் 18ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்