கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது சரிதா நாயர் விவகாரம். பிரபல அரசியல் புள்ளிகள் தொடர்புடைய இந்த வழக்கில் தன்னுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பிக்களின் பட்டியலை நேற்று விசாரணை கமிஷன் முன்பு சமர்பித்தார் சரிதா நாயர்.
இந்த கமிஷன் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்கு மூலம் அளித்த சரிதா நாயர், சோலார் பேனல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கும் பல கோடி பணம் லஞ்சமாக கொடுத்ததாக கூறியதோடு, முதல்வர் உம்மன்சாண்டி உள்பட சில அமைச்சர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார். இதனால் மிகவும் பூதாகரமாக வெடித்தது இந்த விவகாரம்.
அரசு விருந்தினர் மாளிகை, கிளிப் ஹவுஸ் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தன்னுடன் தங்கிய எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோர் தன்னுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் ஆடியோ, வீடியோ தொடர்பான சி.டி.க்களையும் கமிஷன் முன்பு கொடுத்துள்ளேன் என சரிதா நாயர் கூறியுள்ளார்.