ரத்ததானம் செய்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர்!

திங்கள், 14 ஜூன் 2021 (20:07 IST)
ரத்ததானம் செய்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர்!
இன்று இரத்ததான தினத்தை அடுத்து இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
 
சமூக வலைதளங்களில் பல பிரபலங்கள் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வைரஸ் காலத்தில் கண்டிப்பாக ரத்த தானம் செய்தால் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வகையில் சற்று முன் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் ரத்த தான தினத்தை அடுத்து ரத்ததானம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்