சபரிமலையில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய்!!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (11:43 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல்.  

 
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பலர் மாலை போட்டு வந்து தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் நடைபெறும் படி பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகளை காணவும், பிரசாதத்திற்கும் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை உயர்த்த தேவசம் போர்டு முடிவு செய்தது.
 
அதன்படி, இனி படி பூஜைக்கு ரூ.1,37,900, சகஸ்ரகலசம் ரூ.91,250, உதயாஸ்மன பூஜை ரூ.61,800 என மேலும் பல பூஜைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. பிரசாதத்தை பொறுத்தவரையில் கெட்டு நிறைத்தல் ரூ.300, அபிஷேக நெய் ரூ.100, நீராஞ்சனம் ரூ.125, அப்பம் 1 பாக்கெட் ரூ.45 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய கட்டணம் இந்த ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வந்தது. 
 
இந்நிலையில்  சித்திரை விஷுசிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்