பிரதமர் மோடி கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யவில்லை என்றும் அதேபோல் இரண்டு கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக கூறிய வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் கூறிய ராகுல்காந்தி, ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிகவும் வறிய நிலையில் உள்ள 20 சதவீத குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டொன்றுக்கு 72 ஆயிரம் ரூபாய் வீதம் வங்கி கணக்கில் நிச்சயம் செலுத்தப்படும் என்றும் இதனால் 5 கோடி குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர் பலன் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றும் ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாக்கில் சுத்தம் இருக்க வேண்டும், என்ன செய்ய முடியுமா அதை மட்டுமே வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கூறினார்.