ரூ.35,000 கோடி.. மினிமம் பேலன்ஸ் இல்லையென வங்கிகள் வசூலித்த தொகை..!
புதன், 9 ஆகஸ்ட் 2023 (18:59 IST)
மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் சுமார் 35 ஆயிரம் கோடி வசூலத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காமல் இருந்த வாடியக்காரர்களிடமிருந்து அபராத தொகையாக ரூ.21,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஏடிஎம் பயன்பாடு வகையில் ரூபாய் 8889 கோடியும் எஸ்எம்எஸ் சேவைக்கான தொகையாக ரூபாய். 6654 கோடியும் வசூல் ஆகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வசதி வசூலித்த தொகையின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது