குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபார் மகேஷ் ஷா என்பவரிடம் கணக்கில் வராத ரூ.13,860 கோடி சிக்கியது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் மகேஷ் ஷாவிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் மற்றும் அதற்கான கணக்கு சமர்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.