மேகாலயா மாநிலம் சில்லாங் மாவட்டத்தில், வங்காளதேச நாட்டின் எல்லையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கு முகேஷ் தியாகி என்பவர் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றி வருபவர் அர்ஜின் தெஸ்வால். முகேஷ் தியாகிக்கும் அர்ஜின் தெஸ்வாலுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த அர்ஜின் தெஸ்வால், முகேஷ் தியாகியை துப்பாகியால் சுட்டார்.
அதனை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர் பிரதீப் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் யாதவ், மற்றொரு போலீஸ்காரர் ஜோகிந்த் குமார் ஆகியோரையும் சுட்டிருக்கிறார். இதில் முகேஷ் தியாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 3 போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.