ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களால் பூமி வெப்பமடைந்து வருகிறது. மரங்களை வெட்டுதல், காட்டுத்தீ, குப்பைகளை எரித்தல் போன்ற தொடர் சங்கிலி நிகழ்வுகளால் பூமியின் பல்வேறு பகுதிகள் பருவநிலை மாற்றத்தை எதிர் கொண்டு வருகின்றன.
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலையை கணக்கிடுகையில் 2070க்குள் இந்தியாவில் கோடைகாலம் என்பது 8 மாதங்களாக மாற்றம் பெற வாய்ப்பிருப்பதாக ஆய்வியல் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மார்ச் மத்திய பகுதியில் தொடங்கும் கோடைகாலம் ஜூன், ஜூலை வரை நீடிக்கிறது. அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆட தொடங்கிவிடுகிறது.