கேரளாவுக்கு மட்டுமல்ல, ஐயப்ப பக்தர்களுக்கும் ”ரெட் அலர்ட்”..

சனி, 20 ஜூலை 2019 (13:58 IST)
கேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், சபரிமலையில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால், சில நாட்களாக மாநிலத்தில், ”ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை அடிவாரமான பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவருகிறது. ஆதலால் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பம்பை நதியின் வெள்ளப்பெருக்கால் நதியின் படிக்கட்டுகளையும் தாண்டி, பக்தர்கள் நடந்து செல்லும் மணல் பரப்பையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அதனருகிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் திருவேணி பாலம் வழியாக சன்னிதானத்திற்கு செல்கின்றனர். பக்தர்கள் எச்சரிக்கையுடன் பம்பையை கடக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்