சாலைத் திட்டங்களுக்கு 90% வரை கடன் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (12:18 IST)
சாலைத் திட்டங்களுக்கு 90 சதவீதம் வரை கடன் வழங்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. 
 
மேலும், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகமும் மேற்கொண்டுள்ளன. 
 
நிலம் கையகப்படுத்துவதை நெறிமுறைப் படுத்துதல் மற்றும் சட்டபடியான ஒப்புதல் பெறுவது, இணக்கமான மாற்று சலுகைகள் பெறுபவர்கள், குறிப்பிட்டுள்ள பிரீமியங்களை மறுபட்டியலிடுதல், சாலைத் துறைக்கான கடன்களைப் பரீசலனை செய்தல், திருத்தி அமைக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையை அறிமுகப்படுத்துதல், இதர அமைச்சகங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுதல் போன்ற நடவடிக்கைகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 
 
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் சுற்றுச் சூழல் அனுமதியையும் வனப் பகுதிகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதியையும் வேறு வேறாகப் பிரித்து உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான அனுமதியைப் பெறுவது மற்றும் வனங்கள் அல்லாத பகுதிகளில் புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி பெறுவது ஆகியவற்றை இந்த அமைச்சகம் நடைமுறைப்படுத்தும். 
 
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வங்கிகளுக்கு 90 சதவீதம் வரை சாலைத் திட்டங்களுக்கு கடன் வழங்குமாறு ஆலோசனை வழங்கி உள்ளது. 
 
இத்தகவலை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜார் மக்களவையில் 2014 ஜூலை 31 அன்றுதெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்