கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலைத் தின்ற எலிகள்…. அதிர்ச்சி சம்பவம்

திங்கள், 21 செப்டம்பர் 2020 (20:36 IST)
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்  கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் எலியால் கொறித்துக் தின்னப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்  உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில்  கொரொனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ( 87 வயது ) அனுமதிக்கப்பட்டார்.

 அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   பின்னர் அவரது உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டு பின் அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் உடலை வாங்கிய உறவினர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் முகத்தில் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் சிதைந்து காணப்பட்டுள்ளது,  மேலும் இது குறித்து மாவட்ட நீதிமப்ன்றத்தில்  புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 4 மணி நேரத்தில் அங்குள்ள எலிகள் அவரது உடலைக் கடித்து சின்னாபின்னமாக்கியுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்