கேரள வெள்ளம்: தேசிய ஊடகங்களை வறுத்தெடுத்த ஆஸ்கார் நாயகன்

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (22:22 IST)
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தினால் பலியாகியுள்ளனர்.
 
இந்த நிலையில் சிறந்த ஒலி வடிவமைப்பாளர் என்ற பிரிவுக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தேசிய ஊடகங்களை தனது டுவிட்டரில் வறுத்தெடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
 
என் இனிமையான தேசிய ஊடகங்களே, இப்போது கொச்சி விமான நிலையத்தின் நிலைமை இதுதான். கேரள வெள்ளத்தின் தாக்கம் என்ன என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இன்னும் இது தேசிய பேரிடர் என்பது தெரியவில்லையா? இனி இனிய கேரள மக்களே இனிமால் நாம் தான் நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும், ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.
 
ரசூல் பூக்குட்டியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

My dear #NationalMedia this is #KochiAirport as of now! Do you all have any idea the extend of #KeralaFloods still it’s not a #NationalCalamity! My #Keralites we have to deal with this on our own! Jai Hind! pic.twitter.com/i59XAbufsr

— resul pookutty (@resulp) August 16, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்