ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய்: பாடப் புத்தகத்தில் சர்ச்சை!!

புதன், 12 ஜூலை 2017 (16:54 IST)
ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் என்று குஜராத் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மதத்தவரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ரோஷா என்று அழைக்கப்படும் ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் அது வயிற்றுப்போக்கை உண்டாக்கும் என்று குஜராத் மாநில நான்காம் வகுப்பு ஹிந்தி பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இது முஸ்லிம்கலின் வழிபாட்டு நம்பிக்கையில் அவமானப்படுத்துவதாக உள்ளது என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து விளக்கமளித்த புத்தகத்தின் எழுத்தாளர் நிதின், இது அச்சிடும்போது ஏற்பட்ட பிழையாகும். அதாவது haiza (காலரா) என்பதற்கு பதிலாக Roza என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்