3 மாநிலங்களவை எம்பிக்க்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

புதன், 17 மார்ச் 2021 (19:02 IST)
தமிழகம், கேரளா, புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அதற்கான தேதிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கேரளாவில் விரைவில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாவதை அடுத்து அதற்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்பிகள் அப்துல் வகாப், கே.கே.ராகேஷ் மற்றும் வயலார் ரவி ஆகியோருக்கு ஏப்ரல் 21ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைகிறது
 
இதனை அடுத்து இந்த பதவியை நிரப்புவதற்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெறிமுறைகளை பின்பற்றி எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்