அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் அதிகாரம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

சனி, 30 மே 2015 (03:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் அனைத்து அமைச்சர்களுக்கும், சமமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  பெருமிதமாக கூறினார்.
இது குறித்து, டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியாவது:-
 
பிரமதர் நரேந்திர மோடியின் அமரச்சரவையில், அமைச்சர்கள் யாருக்கும் அதிகாரம் இல்லாமல் இல்லை. காங்கிரஸ் கட்சி தவறான தகவலை பரபரப்புகிறது. 
 
உண்மையில், அனைத்து அமைச்சர்களுக்கும், சமமாக அதிகாரம் பங்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுகிறது.
 
அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஆனால், இரு தரப்பும் அமர்ந்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தினால், இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண முடியும்.
 
கடந்த ஓராண்டு மத்திய ஆட்சியில், இந்தியாவில் உள்நாட்டுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
 
இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு அவைகள் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்