தனியாருக்குச் செல்கிறதா இந்திய ரயில்வே?: வீ.கே. யாதவின் அதிரடி முடிவு

புதன், 19 ஜூன் 2019 (13:07 IST)
இந்திய ரயில்வேயில் தனியார் மூலம் ரயில்களை குத்தகை முறையில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆரம்ப கட்டமாக சுற்றுலாத் தளத்திற்கு ஒரு ரயிலை இயக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெறவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ், தனியார் மூலம் இயக்கப்படும் ரயில்கள் சுற்றுலாத் தலத்திற்கோ அல்லது கூட்டம் குறைவாக உள்ள பகுதிகளுக்கோ இயக்க அனுமதிக்கப்படலாம் என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, ரயில்வேயின் சுகாதாரப் பணிகள் குத்தகை முறையில் தனியாரிடம் அளிக்கப்பட்டது. அதற்காக பல சமூக ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்புகளும் வந்தன.

தற்போது ரயில்களை, தனியார்களை வைத்து இயக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி, ரயில்வே துறை முழுவதுமாக தனியார்மயத்துக்கு மாறப்போகிறதோ என்ற அச்சத்தை சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்