ரயில்வே பட்ஜெட்: காய்கறிகள் மற்றும் பழங்களை பத்திரமாகக் கொண்டு செல்ல புதிய திட்டம்

செவ்வாய், 8 ஜூலை 2014 (13:39 IST)
ரயில்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை பத்திரமாகக் கொண்டு செல்ல தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும் என்று சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

ரயில்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை பத்திரமாகக் கொண்டு செல்ல தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும்.

புதிய வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க 18 இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. புதிய ரயில் நிலையங்களையும், ரயில் நிறுத்தங்களையும் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் வலியுறுத்தல்களை வைத்தே முடிவு செய்யப்படும்.

உள்நாட்டு, அந்நிய முதலீடு மூலம் நிதி திரட்டப்படும் பயணிகளுக்கு மேலும் சுமையை ஏற்ற மாட்டோம். ரயில் கட்டண உயர்வு மூலம் 8 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று சதானந்த கௌடா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்