ரயில்வே பட்ஜெட் 2014 - 'தூய்மை நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி'

செவ்வாய், 8 ஜூலை 2014 (12:57 IST)
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து வரும் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, ரயில் நிலையங்களில் தூய்மை நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் 
 
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். 
 
தற்போது ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், ரயில்வே நிலையங்களில் துய்மை நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுமெனவும், ரயில்களிலும், ரயில்வே நிலையங்களிலும் பொது மக்கள் சுகாதாரமான முறையில் நடந்துகொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயணச்சீட்டின் பின்புறம், குறிப்புகள் அச்சிடப்படும் எனவும் தெரிவித்தார்.
 
ரயிலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், 17,000 ரயில்வே காவல் துறையினர் மற்றும் 4000 மகளீர் காவல் துறையினர் ஈடுபடுத்தபடுவார்கள் எனவும்,  ஆளில்லா ரயில்வே கிராசிங்கால் ஏற்படும் ரயில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு 5400 ஆளில்லா ரயில்வே கிராசிங்களையும் நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்