ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த 58 புதிய ரயில்களின் பட்டியல்

செவ்வாய், 8 ஜூலை 2014 (20:05 IST)
2014-15ஆம் ஆண்டில் தமிழகத்தில் நான்கு ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஷாலிமார் - சென்னை, ஜெய்பூர் - மதுரை, அகமதாபாத் - சென்னை, விசாகப்பட்டினம் - சென்னை ஆகியவையே தமிழகம் பெற்ற புதிய ரயில்கள் ஆகும். இவை அல்லாமல், வேளாங்கண்ணிக்கும், மேல்மருவத்தூருக்கும் விழாக்கால சிறப்பு ரயில்கள் விடப்படும்.
 
5 ஜன சாதாரண ரயில்கள், 5 பீரிமியம் ரயில்கள், 6 குளிர்சாதன வேக ரயில்கள், 27 துரித ரயில்கள் 8 பேசஞ்சர் ரயில்கள், மெயின் பாதையில் 2 மின்சார ரயில் சேவை, 5 டீசல் ரயில் சேவைகள் ஆகியவை இதில் அடங்கும். நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட்டைச் சமர்ப்பித்த ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா இதை அறிவித்தார். 

 
மேலும், இப்போதுள்ள பதினோரு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். விசேஷ மற்றும் திருவிழா காலங்களில் அதிகரிக்கும் தேவையை இவை எதிர் கொள்ளும். மேல்மருவத்தூர், வேளாங்கன்னி, ஜலவார் போன்ற கோயில் திருவிழாக் காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகரிக்கும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க விடப்படும் சிறப்பு ரயில் சேவை தொடரும் என்றும் அவர் கூறினார். 
 
அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ரயில் சேவை:-
 
1. ஜன சாதாரண ரயில் சேவை
2. அகமதாபாத் - தர்பங்கா துரித ரயில் (வழி சூரத்)
3. ஜெய் நகர் மும்பை
4. மும்பை கோரக்பூர்
5. சஹராசா - ஆனந்த் விகார் (வழி மோதிகாரி)
6. சஹராசா - அம்ரித்சர் 
 
பீரிமியம் ரயில் சேவை:-
 
1. ஷாலிமார் - சென்னை 
2. மும்பை சென்ட்ரல் - புது தில்லி
3. ஜெய்பூர் - மதுரை
4. சகெந்திராபாத் - ஹசரத் நிஜாமுதின்
5. காமாக்கியா - பெங்களுரு
 
குளிர்சாதன துரித ரயில்கள்:-
 
1. விஜயவாடா - புது தில்லி (தினசரி)
2. லோக்மான்ய திலக் - லக்னோ (வாராந்திரம்)
3. நாக்பூர் - பூனே (வாராந்திரம்)
4. நாக்பூர் - அம்ரித்சர் (வாராந்திரம்)
5. நகர்லகுன் - புது தில்லி (வாராந்திரம்)
6. நிஜாமுதின் - புனே (வாரந்திரம்)

துரித ரயில்கள்:-
 
1. அகமதாபாத் - சென்னை (வாரம் இரு முறை) (வழி வசாய் சாலை)
2. விசாகப்பட்டினம் - சென்னை (வாராந்திரம்)
3. அகமதாபாத் - பாட்னா (வழி வாரநாசி) (வாரந்திரம்)
4. பெங்களுரு - மங்களுர் (தினசரி)
5. பெங்களுரு - ஷிமோகா (வாரம் இரு முறை)
6. பாந்த்ரா - ஜெய்பூர் (வழி நாக்தா கோட்டா) (வாரந்திரம்)
7. பிதர் - மும்பை 
8. சாப்ரா - லக்னோ (வழி பாலியா, காசிபூர், வராநாசி) (வாரம் மூன்று முறை)
9. பெரோஸ்பூர் - சண்டிகர் (வாரம் 6 நாட்கள்)
10. குவகாத்தி - நகர்லாகுன் (தினசரி)
11. குவகாத்தி - மர்கான்சிக் (தினசரி)
12. கோரக்பூர் - ஆனந்த் விகார் (வாராந்திரம்)
13. ஹபா - பிலாஸ்பூர் (வழி நாக்பூர்) (வாராந்திரம்)
14. ஹசூர் - சகேப் நந்த்தேடு பிகானிர் (வாராந்திரம்)
15. இந்தூர் - ஜம்மு தாவி (வாராந்திரம்)
16. காமாக்கியா - காட்ரா (வழி தர்பாங்கா) (வாராந்திரம்)
17. கான்பூர் - ஜம்மு தாவி (வாரம் இரு முறை)
18. லோக்மான்ய திலக் - அசாம்கர் (வாராந்திரம்)
19. மும்பை - காசிபேட் (வழி பலார்ஷா)
20. மும்பை - பளித்தானா (வாராந்திரம்)
21. புதுதில்லி- பட்டின்டா சாதாப்தி (வாரம் இரு முறை)
22. புது தில்லி - வாரநாசி (தினசரி)
23. பராதிப் - ஹவுரா (வாரந்திரம்)
24. பராதிப் - விசாகப்பட்டினம் (வாரந்திரம்)
25. ராஜ்கோட் - ரேவா (வாராந்திரம்)
26. ராம் நகர் - ஆக்ரா (வாராந்திரம்)
27. டாட்டாநகர் - பையப்பனஹல்லி (பெங்களுரு)
 
பயணியர் ரயில்:-
 
1. பிகானிர் - ரேவாரி (தினசரி)
2. தார்வாத் - தந்தேலி (வழி அல்னவார்) (தினசரி)
3. கோரக்பூர் - நவுத்தான்வா (தினசரி)
4. குவாகாத்தி - மெந்திபத்தார் (தினசரி)
5. ஹட்டியா - ரூர்கேலா 
6. பைந்தூர் - கசர்கோட் (தினசரி)
7. வடக்கு ரங்கபாரா - ராங்கியா (தினசரி)
8. யஷ்வந்பூர் - தும்கூர் (தினசரி)
 
மெயின் லைனில் மின்சார ரயில் சேவை:- 
 
1. பெங்களூர் - ராமநகரம் (6 நாட்கள்) (3 இணை)
2. பல்வல் - தில்லி - அலிகர்
 
டீசல் ரயில் சேவை:- 
 
1. யஷ்வந்த்பூர் - ஓசூர் (6 நாட்கள்)
2. சம்பர்பூர் - ரூர்கேலா (6 நாட்கள்)
3. பெங்களூரு - நீல்மங்களா (தினசரி)
4. சாப்ரா - மான் டுவாதி (வழி பால்லியா) (வாரம் 6 நாட்கள்)
5. பாரமுல்லா - பனிகள் (தினசரி)
 
ரயில் சேவை விரிவாக்கம்:-
 
1. 22409 / 22410 ஆனந்த விஹார் சாசாராம் கரீப்ரத் எக்ஸ்பிரஸ் - கயா வரை
2. 12455 / 12456 தில்லி சராய் ரோகிலா-ஸ்ரீகங்கா நகர் எக்ஸ்பிரஸ் பீகானிர் வரை
3. 15231 / 15232 கோண்டியா - முசாபர்பூர் எக்ஸ்பிரஸ் பரோனி வரை
4. 12001 / 12002 புது தில்லி - போபால் சகாப்தி துரித ரயில் ஹபிப்கஞ்
5. 54602 லூதியானா - ஹிசார் பசஞ்சர் ரயில் சதுல்பூர்
6. 55007 / 55008 சோன்பூர் - கப்டன்கஞ் பசஞ்சர் ரயில் கோரப்பூர் வரை
7. 55072 / 55073 கோரப்பூர் - தவே பசஞ்சர் ரயில் சிவான் வரை
8. 63237 / 63238 பக்சார் - முகல்சாராய் மின்சார ரயில் வாரநாசி வரை
9. 63208 / 63211 ஜஜ்கா - பாட்னா மின்சார ரயில் ஜசித் வரை
10. 64221 / 64222 லக்னோ - ஹர்தாய் மின்சார ரயில் ஷார்ஜகான்பூர் வரை
11. 68002 / 68007 ஹரா - பெல்டா மின்சார ரயில் சலேசர் வரை

வெப்துனியாவைப் படிக்கவும்