இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
ஆனால் ராஜினாமா செய்ததில் உறுதியாக இருக்கும் ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக நேருக் குடும்பத்தவர் அல்லாத ஒருவரை நியமிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதனால் வட இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தந்த பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் தலைவராக பரிந்துரை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.