இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ’இதே ரீதியில் சென்றால் இந்தியா மிகப் பெரிய விலையை கொரோனாவுக்காக கொடுக்க வேண்டி நேரிடும் என்று ஆவேசமாக டுவிட் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக மிகத் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் ஆவேசமான நடவடிக்கைகள்தான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்றும் ஆனால் மத்திய அரசின் திறமையின்மை மற்றும் தீர்க்கமின்மை காரணங்களால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ராகுல் காந்தி கடுமையாக எச்சரித்துள்ளார்
ஏற்கனவே நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த போது ’மத்திய அரசு கொரோனா விவகாரத்தில் ஆரோக்கியம் இன்றி செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் அலட்சியத்தால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது