ராகுல் காந்தி ஒரு மனநோயாளி; மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

சனி, 1 செப்டம்பர் 2018 (21:02 IST)
ராகுல் காந்தி ஒரு மனநோயாளி என்று மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை இணை மந்திரியான அஷ்வினி குமார் சவுபே பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- 
 
பிரதமர் மோடி வானம் போன்றவர். ஆனால் ராகுல் காந்தி ஒன்றும் இல்லாதவர். ராகுல் தன்னை சிறந்தவர், அறிவாளி, சரியானவர் என கூறி கொள்கிறார். ரபேல் ஜெட் ஒப்பந்தத்தில் மோடி ஒரு பொய்யர் என ராகுல் கூறுகிறார்.  
 
அவருக்கு ஸ்கைசோபிரீனியா என்ற மனநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இந்த வியாதியால் பாதிப்பு அடைந்தவர் மற்றவர்களை மனநோயாளி என கூறுவர்.  ராகுலை மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியை மனநோயாளி என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்