இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச விவசாயிகளின் கடன்களை உ.பி அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது சிறு அளவிலான நிவாரணம் என்றாலும் சரியான திசையில் செல்லும் ஒரு முடிவு. நாடு முழுவதும் அவதிப்படும் விவசாயிகளுடன் நாம் அரசியல் ரீதியாக விளையாடக்கூடாது. இதுபோல நாடு முழுவதும் பேரிடர்களுக்கு ஆளாகி இருக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்' என்று கூறியுள்ளார்