அதைப்பிடித்த அதிகாரி கெத்தாக தனது தோளில் அந்த பாம்பை மாலை போல் போட்டுக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு போஸ் கொடுத்தார். அவருடன் சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரின் கழுத்தை இறுக்கத்தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர். இருப்பினும் அருகிலிருந்து சக ஊழியர்கள் பாம்பை விடுவித்து அருகிலிருந்த காட்டில் விட்டனர்.